Monday, September 24, 2012

ரஜினியை உருவாக்கிய கலைஞானம்

ரஜினி ஆறுபுஷ்பங்கள் படத்தில் நடித்த பொழுது அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதிய கலைஞானம் அவர்களின் நட்பு கிடைத்தது. கலைஞானம் ரஜினியிடம் , தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்தப் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.பெருமகிழ்ச்சியடைந்த ரஜினி கலைஞானத்திடம் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார். இளையராஜா இசையில் டி.எம்.எஸ் நண்டூறுது, நரியூது பாடலை பாடினார். ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார். டி.எம்.எஸ் பாடுவதை கேட்டுவிட்டு கலைஞானம் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார் .. டி.எம்.எஸ். பாடி அதில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை ” என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். 0 *பைரவி (1978) *, ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்தப்படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப் படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார். எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார். 0 எம்.பாஸ்கர் இயக்கிய *பெளர்ணமி அலைகள்* (1984) படத்திலுள்ள அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் பாடல்கள் , இசை சங்கர் கணேஷ் , குறிப்பாக ஜெயச்சந்திரனும் வாணிஜெயராமும் பாடிய *தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும் * என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் http://www.inbaminge.com/t/p/Pournami%20Alaigal/Then%20Payum%20Velai.... 0 எம்.பாஸ்கர் இயக்கிய பன்னீர் நதிகள்(1986) படத்தில் காந்தர்வக் குரலான் பாடிய *பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்ப கலையோ* என்ற வர்ணனைப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

No comments: