Monday, September 24, 2012

ரஜினியை உருவாக்கிய கலைஞானம்

ரஜினி ஆறுபுஷ்பங்கள் படத்தில் நடித்த பொழுது அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதிய கலைஞானம் அவர்களின் நட்பு கிடைத்தது. கலைஞானம் ரஜினியிடம் , தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்தப் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.பெருமகிழ்ச்சியடைந்த ரஜினி கலைஞானத்திடம் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டார். இளையராஜா இசையில் டி.எம்.எஸ் நண்டூறுது, நரியூது பாடலை பாடினார். ஏதோ ஒரு படப்பிடிப்பிலிருந்த ரஜினி, இந்தப் பாடலைக் கேட்பதற்காகவே ஏவி.எம்.ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார். டி.எம்.எஸ் பாடுவதை கேட்டுவிட்டு கலைஞானம் கையை பிடித்துக்கொண்டு, “கலைஞானம் சார் .. டி.எம்.எஸ். பாடி அதில் நான் பாடி நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை ” என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். 0 *பைரவி (1978) *, ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் படம். இந்தப்படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இந்தப் படம் தான் ரஜினியை உச்சத்தில் ஏற்றியது. இந்தப் படத்தின் வினியோகஸ்தரான தாணு , ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் அளித்தார். எம்.பாஸ்கர் ஸ்ரீதரின் மாணவர், வெண்ணிற ஆடை படத்தில் உதவியாளராகச் சேர்ந்த இவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் ஸ்ரீதரிடம் வேலை பார்த்தார். 0 எம்.பாஸ்கர் இயக்கிய *பெளர்ணமி அலைகள்* (1984) படத்திலுள்ள அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் பாடல்கள் , இசை சங்கர் கணேஷ் , குறிப்பாக ஜெயச்சந்திரனும் வாணிஜெயராமும் பாடிய *தேன் பாயும் வேலை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டு பாடும் தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும் * என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் http://www.inbaminge.com/t/p/Pournami%20Alaigal/Then%20Payum%20Velai.... 0 எம்.பாஸ்கர் இயக்கிய பன்னீர் நதிகள்(1986) படத்தில் காந்தர்வக் குரலான் பாடிய *பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்ப கலையோ* என்ற வர்ணனைப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள். 0 பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.. 0 கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன். 0 ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88) 0 சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம் பொங்கும் பாடல்களை மட்டுமே மிகவும் விரும்பிக் கேட்பேன். 0 அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு - தைபிறந்தால் வழி பிறக்கும் 0 மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம்,மணக்க வரும் மாலைப் பொழுதோடு மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும் மலர்ந்து வரும் ஆசை விழியோடு மன்மதன் வந்தான் தேரோடு....இங்கே .. காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட் - ஒளிவிளக்கு 0 வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம் போடுதடி - பழனி 0 அன்பே என் ஆரமுதே வாராய் / தென்றலலை மீதினிலே திங்கள் பிறை தோணியினிலே தேன்மொழி உனை அழைத்தே செல்வேனே - கோமதியின் காதலன் 0 கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லிகைப்பூ கேக்காத கேள்வியெல்லாம் கேட்குதடி உன் அழகே 0 பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ பவள குங்கும நெத்தி மணக்குது சூடியது யாரோ இங்கு குயில போல பாட்டு வந்தது பாடியது யாரோ மெல்ல குலுங்கும் சலங்கை ஓசை வந்தது அடியது யாரோ - வாழ்க்கைப் படகு 0 காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே அடே கண்ணு சின்ன பொண்ணு என்னை கொஞ்சாதே கோழிமுட்டை கண்ணாலே - இரு வல்லவர்கள் 0 வாம்மா வாம்மா சின்னம்மா வயசு வந்த பொன்னம்மா இந்த நேரம் காட்டுக்குள்ளே எங்கே வந்த செல்லம்மா - தாயில்லா பிள்ளை 0 பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது - கொடுத்து வைத்தவள் 0 எல்லையில்லாத இன்பத்திலே நாம் இணைந்தோம் இந்நாளே இமையும் விழியும் போலே இணைந்தோம் அன்பினாலே - சக்கரவர்த்தித் திருமகள் 0 கரும்பாக இனிக்கின்ற பருவம் .. இதை கதையாக சொல்லுது உன் காதல் உருவம் .. அழகான மொழி பேசும் விழி இரண்டும் அமுதம் அதிலே நீ தருகின்றாய் பருகாத அமுதம் - கொங்கு நாட்டு தங்கம் 0 ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே சிங்கார சிலையே நீ திரும்பி பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே - சபாஷ் மீனா 0 காதலென்னும் சோலையிலே ராதே ராதே நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே - சக்கரவர்த்தித் திருமகள் 0 தட்டு தடுமாறி நெஞ்சம் கை தொட்டு விளையாட கொஞ்சும் சிட்டு முகம் காதல் சொல்லும் கை பட்டு மலர் மேனி துள்ளும் - சாரதா 0 சிங்கார தேருக்கு சேலை கட்டி / சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி தெரு தெருவா அத நடக்கவிட்டா / இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும் - இது சத்தியம் 0 சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு / தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா மச்சான் தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா /ஆறு புரம் தங்க மணி அல்லி வேஷம் போடுறாளாம் / நாடகம் பார்க்கப் போறேன் வாரியா பொண்ணே நாளைக்கி திரும்பிடலாம் ஜாலியா - பிள்ளைக்கனி அமுது 0 பொங்கும் அழகு பூத்து குலுங்கும் தங்கதாமரையே /அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும் இன்பக் காவிரியே - தங்கம் மனசு தங்கம் 0 உலகமெல்லாம் இருண்டது போல் தோணுது/உன் உருவம் ஒளிவிளக்காய் காணுது - கலைகள் எல்லாம் உன் வடிவினால் / மெய்க் காதலினால் எனக்கு சொந்தமானது- நான் கண்ட சொர்க்கம் 0 வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து /வாடாமல் இருக்கும் பூ என்ன பூ அன்புக் கணவனின் முன்னாலே மனைவி / அழகாகச் சிந்தும் புன்சிரிப்பூ - எங்கள் குல தேவி 0 வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மறவேன் உனை எழில் தீரா - ராஜாதேசிங்கு 0 யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது - சபாஷ் மாப்பிள்ளை 0 செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் / தித்திக்கும் தேன் குடமே செண்பக பூச்சரமே செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் - யானைப்பாகன் 0 நிலவோடு வான்முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு எனதுள்ளம் உனைதேடுதே - ராஜராஜன் 0 இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே புதிய உணர்வலைகள் பொங்கியிசை பாடுதே - ராஜராஜன்